'குற்றம் 23 ' படத்தின் மூலம் தனி ஹீரோவாக தன்னை நிரூபித்த அருண்விஜய், அடுத்ததாக நம்பி இருக்கும் திரைப்படம் 'தடம்'. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் சென்சார் சான்று மற்றும் படத்தின் முழு நேர அளவு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள்,  'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் ரன்னிங் டைம் சரியாக 138 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 18 நிமிடங்கள் என தெரியவந்துள்ளது.

அருண் விஜய் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.