அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து பட்டையை கிளப்பிய தடம் திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
பிரபல நாயகர்களில் ஒருவராக இருக்கும் அருண் விஜய் நாயகனாக தடம் என்னும் படத்தில் நடித்திருந்தார். தமிழ்மொழி க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இந்த படத்தை மகிழ்திருமேனி எழுதி இயக்கியுள்ளார். இந்தர் குமார் தயாரித்த இதில் அருண் விஜய் இரட்டை வேடத்திலும், தன்யா ஹோப், ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் வித்யா பிரதீப் என மூவர் நாயகியாக நடித்திருந்தனர்.
அருண் ராஜா இசையமைத்துள்ள இதற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான்யா மற்றும் ஸ்ம்ருதி ஆகிய இருவரும் அறிமுகமாகி இருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படம் வெகுவாக பாராட்டுகளைப் பெற்றது. வணிக ரீதியாகவும் வெற்றி அடைந்தது தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படத்தில் ஒன்றானது.

இதில் சகோதரர்களான எழில், கவின் இடையேயான வாழ்க்கை பயணம் கட்டப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐஐடியில் சிவில் இன்ஜினியராக எழில் , அதே சமயம் தோற்றத்தில் இருக்கும் கவின், சூதாட்டத் திருடன், தன் பக்கத்து வீட்டுக்காரன் சுருளியுடன் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறான். எழிலின் காதல் விருப்பம் ஒரு ஐடி பெண் தீபிகா, அதே நேரத்தில் ஆனந்தி என்ற பெண் கவின் உண்மையான அடையாளம் தெரியாமல் காதலிக்கிறாள்.
இவ்வாறு சுமுகமாக சென்று கொண்டிருக்கும் இவர்களது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக கொலை வழக்கில் எழில் மாட்டிக்கொள்கிறார். இந்த வழக்கில் இருந்து ஒரே டீஎன்ஏ வை கொண்ட இரட்டையர்களான இவர்கள் போலீசை குழப்பி தண்டனையில் இருந்து தப்பிக்கும் டிவிஸ்ட் நிறைந்த சம்பவம் தான் இந்த படத்தின் மைய கதை.
இப்படத்தின் தெலுங்கில் போதினேனியை வைத்து ரெட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் தடம் ஹிந்தியில் ரீமேக்காகும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்படம் பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் வர்தன் கேட்கர் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

