அருண் விஜயின் சினம் படம் வெளியீட்டிற்காக நீண்ட காலமாக காத்திருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி என் ஆர் குமாரவேலன்இயக்கியிருக்கும் அருண்விஜய்யின் புதிய படம் தான் சினம். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். பாலக் லால்வாணி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் வேடத்தில் நடித்துள்ளார்.முன்னதாக குற்றம் 23, மாஃபியா அத்தியாயம் ஒன்று மற்றும் சோனிலைவில் சமீபத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் ஆகிய படங்களில் அருண் விஜய் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது அருண் விஜயின் சினம் படம் வெளியீட்டிற்காக நீண்ட காலமாக காத்திருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சினம் செப்டம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அருண் விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...வாவ் வேற லெவலில் உருமாறிய வரலட்சுமி சரத்குமார்..வைரலாகும் நியூ லுக்

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...புடவையில் புதுமையை புகுத்திய டாப்ஸி... ஹாட் பச்சை வண்ணக்கிளியாய் கவரும் நாயகி

முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. 45 வினாடிகள் கொண்ட டீசர் சுவாரஸ்யமாக பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மழை பெய்து கொண்டிருக்கும்போது அருண் விஜய் சாலை ஓரத்தில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பதை தொடர்ந்து படத்தின் பல காட்சிகள் காட்டப்பட்டிருந்தது.சினம் படத்தை அருண் விஜயின் தந்தை விஜயகுமார் தனது ஸ்லைட் ஸ் பிரைவேட் லிமிடேட் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் காலி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

YouTube video player

மேலும் செய்திகளுக்கு...இறகுகள் பதித்த கிளாமர் உடையில் தேவதையாய் ஜொலிக்கும் மாளவிகா

அருண் விஜயின் நடிப்பில் வெளியான யானை படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. முதன் முறையாக ஹரியுடன் கூட்டணி அமைத்த இந்த படம் கிராமத்து நாயகனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. மத வேறுபாடுகள் குறித்து பேசி இருந்த இந்த படத்தில் பிரியா பவானிசாகர் நாயகியாக நடித்திருந்தார். பின்னர் திரைப்படங்களை ஆன்லைன் மூலம் திருடும் கும்பல் குறித்த தமிழ் ராக்கர்ஸ் படத்தில் நடித்திருந்தார் அருண் விஜய். இதில் வாணி போஜன் நாயகியாக நடித்திருந்தார்.