உடற்பயிற்சி மூலம் தனது அழகை மெருகேற்றி வருகிறார் வரு. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் வேற லெவலில் உருமாற்றம் பெற்று ஒல்லிபெல்லியாக. இருக்கிறார் வரலட்சுமி

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் காதலனுடன் சண்டையிடும் காதலியாக வேற லெவலில் நடித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த இவர் பின்னர் தாரை தப்பட்டைபடத்தில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக அல்டரா கவர்ச்சி காட்டியிருந்தார். விக்ரம் வேதா, நிபுணன்உள்ளிட்ட இரு படங்களில் நடித்திருந்தார். பின்னர் சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்திருந்தார். இதன் பின்னர் இவருக்கு எதிர்மறை நாயகியாக நடிக்கும் வாய்ப்புகளே அதிகம் கிடைத்து வந்தது.

மேலும் செய்திகளுக்கு...புடவையில் புதுமையை புகுத்திய டாப்ஸி... ஹாட் பச்சை வண்ணக்கிளியாய் கவரும் நாயகி

சர்க்கார் படத்தில் அரசியல் தலைவரின் மகளாக வரும் இவரின் அசாதாரண நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. பின்னர் மாரி 2 வில் காவல் அதிகாரியாக வந்து அதிகாரியாக வந்தார். முன்னணி நடிகரின் மகளாக இருந்த போதிலும் வரலட்சுமிக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.

சமீபத்தில் இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி உள்ளிட்ட படங்களில் தோன்றி இருந்தார். இதில் இரவின் நிழல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாகும் இதற்காக பல பாராட்டுக்களை பெற்றது. தற்போது சமந்தா நடிக்கும் யசோதா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். பாம்பன், உள்ளிட்டட பல மொழிகளிலும், தெலுங்கு சூப்பர் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணன் நடிக்கும் அவரின் 107 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...இறகுகள் பதித்த கிளாமர் உடையில் தேவதையாய் ஜொலிக்கும் மாளவிகா

இதற்கிடையே உடற்பயிற்சி மூலம் தனது அழகை மெருகேற்றி வருகிறார் வரு. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் வேற லெவலில் உருமாற்றம் பெற்று ஒல்லிபெல்லியாக இருக்கிறார் வரலட்சுமி. அந்த வீடியோவுடன். 'போராட்டம் உண்மையானது.. சவால் உண்மையானது.. ஆனால் நீங்கள் விரும்பியதை அடைவதை எதுவும் தடுக்க முடியாது..நீங்கள் யார்.. அல்லது நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று யாராலும் சொல்ல முடியாது.. உங்களை நீங்களே சவால் விடுங்கள்.. உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். போட்டி.. மற்றும் நீங்கள் அடையக்கூடிய தொகையால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.. 4 மாத கடின உழைப்பு, இதற்கு நான் காட்ட வேண்டியது இதுதான்.. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதைச் செய்யுங்கள்.. மற்றவர்களை மகிழ்விக்க எதையும் செய்யாதீர்கள். உன்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று யாரும் சொல்ல வேண்டாம்.!!! நம்பிக்கை ஒன்றே உனது ஆயுதம்..!! என எழுதியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...அட இன்னமும் மாஜி மாமனார் மீது பாசம் விட்டு போகலையே? சூப்பர் ஸ்டார் போஸ்டரை புகழ்ந்த தனுஷ்

View post on Instagram