அஜீத்தின் அடுத்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அருண்குமார் நடிக்கவிருப்பதாக வரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்று அருண்குமார் வட்டாரம் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக ‘தல60’படம் தொடர்பான ஒருவர் கூட அருண்குமார் தரப்பை தொடர்புகொள்ளவில்லை என்று தெரிகிறது.

தற்போது அஜித்குமார் உடல் எடையை குறைத்து புதிய படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்தையும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய வினோத்தே டைரக்டு செய்கிறார். இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக படத்தை தயாரிக்கும் போனிகபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்குமார் மோட்டார் பந்தய வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம் பெறுகின்றன. இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அஜித்தின் ’என்னை அறிந்தால்’ படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அருண் விஜய் நடித்து இருந்தார். அந்த படத்துக்கு பிறகு அருண் விஜய்க்கு அதிக படவாய்ப்புகள் குவிந்தன. அப்படத்தில் நடித்தபோது இருந்த சூழலில் தற்போது அருண் இல்லை. அவரது கேரியரில் முக்கிய படமாக இதற்கு முன் ரிலீஸான ‘தடம்’படம் அமைந்துள்ள நிலையில் அவருக்கு ஹீரோவாக நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனவே அழைப்பு வந்தாலும் அருண் விஜய் வில்லன் வேடத்தில் நடிப்பது சந்தேகமே என்கிறது அவரது நண்பர் வட்டாரம்.