arun vijay make parotta for road shop
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அருண் விஜய். வாரிசு நடிகரான இவருக்கு பணம் காசுக்கு குறைவு என்று சொல்லவே முடியாது, இவருடைய தந்தை பழம்பெரும் நடிகர் விஜயகுமார் தற்போதும் பல படங்களில் குணசித்திர வேடத்திலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து அசத்தி வருகிறார். 
இந்நிலையில் அருண் விஜய், ரோட்டோரத்தில் உள்ள, ஒரு கடையில் பரோட்டா போடுவது போல் வெளியாகியுள்ள புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 
கோடிகணக்கில் பணம், சொத்து இருந்தும் இவர் ஏன் இந்த ரோட்டு கடையில் பரோட்டா போட்டார்..? என பல ரசிகர்கள் இவரிடம் கேள்வி எழுப்பி வருகிறனர். விரைவில் ரசிகர்களின் கேள்விக்கு அருண் விஜய் பதில் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். 
என்னை அறிந்தால் படத்தின் மூலம், ஸ்டைலிஷ் வில்லனாக விட்ட இடத்தை பிடித்த அருண் விஜய், குற்றம் 23 படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நிரூபித்தார். தற்போது வா டீல், தடம், சாஹோ, மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
