'கனா' படத்தை இயக்கி முதல் படத்திலேயே தன்னை ஒரு இயக்குனராக ரசிகர்கள் மனதிலும், தமிழ் சினிமாவிலும் பதிவு செய்து கொண்டவர், பிரபல நடிகரும், பாடகரும், பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ்.

இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்கிய 'கனா' திரைப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.  இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து இவர் அடுத்தபடியாக யாருடைய படத்தை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், தற்போது... நடிகர் கார்த்தி நடிக்க உள்ள படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளதாகவும், இந்த படத்தை கார்த்தி நடிப்பில் வெளியான 'தேவ்' படத்தை தயாரித்த ப்ரிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கோடம்பாக்கத்தில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.