அறிமுக  இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி உள்ள ‘தேஜாவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. 

அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி உள்ள ‘தேஜாவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ் திரையுலகில் தொடர்ந்து, ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்து நடித்து, அதிக படங்களில் நடிக்க விட்டாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் இவர் தற்போது 'டைரி' மற்றும் 'தேஜாவு' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் 'தேஜாவு' படத்தில், மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தேஜாவு’ படத்தினை அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் மிகவும் சுவாரஸ்யமாக இயக்கி வருகிறார். இப்படத்தினை வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். அவருடன் இனைந்து PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனை-தயாரிப்பை மேற்கொள்வதுடன், ஒளிப்பதிவையும் கையாண்டு வருகிறார்.

ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு சார்பில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் தமன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இதனையடுத்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.