arthi is my enemy julee open talk

விஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அந்த விதத்தில் இந்த வாரம் நான்கு பேர் எலிமினேஷன் செய்ய நாமினேட் ஆனார்கள். அவர்களில் நடிகை ஓவியா மக்களிடம் மிகவும் அதிகப்படியான ஓட்டுகளை பெற்று எலிமினேஷன் ஆவதில் இருந்து தப்பித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் மற்ற மூன்று நபர்களில்... வையாபுரியும் காப்பாற்றபட்டதாக அறிவித்த கமலஹாசன், பின் எப்போதும் சண்டை போட்டுக்கொள்ளும், ஆர்த்தியையும் ஜூலியையும் மனம் விட்டு பேசுமாறும் கூறினார்.

அப்போது ஜூலி "நான் உங்களை எதிரியாகவும்... போட்டியாளருமாகத்தான் பார்த்தேன். அது தப்பு தான் என சிரித்துக்கொண்டே அழுதபடி ஆர்த்தியிடம் மன்னிப்பு கேட்டார். உடனே ஆர்த்தி நான் ஒரு நாள் கூட அப்படி உன்னை நினைத்தது இல்லை... நீ சில விஷயங்களில் நடிப்பது தனக்கு பிடிக்கவில்லை. பொய்யாகத்தான் எனக்கு தோன்றியது அதை தான் நான் வெளிப்படையாக சொன்னேன்" என கூறினார்.

இருவரும் வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டதால், மாறி மாறி ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்ட காட்சி பார்த்தவர்களை அவ்வளவு இம்ப்ரெஸ் பண்ணவில்லை என்று தான் சொல்லவேண்டும்.