arthi do wrong arav complaint kamalhassan
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரத்தின் இறுதியில் நடிகர் கமலஹாசன், போட்டியாளர்களுக்கு என்ன பிரச்சனை? அவர்களுக்கு என்ன தேவை? என்பது குறித்து கேட்டு அறிந்து கொள்வார்.
அப்படி தான் கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்த்தி மற்றும் ஜூலிக்கு இடையே நடைபெற்ற சண்டை குறித்து தொகுப்பாளர் கமலஹாசன் நடுநிலையாக பதிலளிக்கும் ஆணழகன் ஆரவ்விடம் கேட்டார்.
அதற்கு ஆரவ் இந்த பிரச்சனை எப்போதோ தீர்ந்திருக்க வேண்டும், தேவையில்லாமல் ஆர்த்தி தான் இதை பெரிதாக்க பார்க்கிறார் என்பது தான் தன்னுடைய அபிப்ராயம் என்று போட்டு உடைத்தார் ஆரவ்.
ஏற்கனவே ஆர்த்தி ஒரு பாம்பு மாதிரி, அவர் மற்றவர்களை சண்டைக்கு இழுத்து விட்டு விட்டு நழுவி கொள்கிறார் என ஓவியாவிடம் கூறி வந்தார் இவர் தற்போது அவர் மனதில் உள்ளதை பொதுவாக கமலிடமே போட்டு உடைத்துள்ளார்.
ஒரு வேலை ஆரவ் இப்படி கூறியதால், வரும் வாரங்களில் இவருக்கும் ஆர்த்திக்கு சண்டை பெரிய அளவில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
