arthi command barani woman version is julee
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் உண்மை முகம் வெளிவந்துக்கொண்டே இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் 10 வது நாளான நேற்று, பரணியை பற்றியும் ஜூலியை பற்றியும் ஆர்த்தி ரைசாவிடம் குறைகூறிக்கொண்டு இருக்கிறார். அதில் பரணியுடைய பொம்பளை வெர்ஷன் தான் ஜுலி என்று கூறினார்.
மேலும் அவள் எப்போதும் ஏதாவது வேலை செய்துக்கொண்டே இருப்பாள், பரணி அங்கும் இங்கும் நடந்துக்கொண்டே இருப்பான் என்றும், பரணி ஜுலி மீது உண்மையான பாசத்தைக் காட்டினாலும் ஜூலி அவன் மீது பொய்யாகத்தான் பாசம் காட்டுகிறாள் என்று ஆர்த்தி ரைசாவிடம் கூறினார்.
இதனை தொடர்ந்து அவர்கள் பேசுகையில், பரணி மிகவும் நல்லவன் ஆனால் ஜூலி அனைவரிடமும் டபுள் கேம் விளையாடி வருவதாக அவரை பற்றி கேவலமாக பேசின ஆர்த்தி "பூவுடன் சேர்த்து நாறும் மணக்கும்" என்று கூறுவாங்க, பரணி ஜூலியுடன் சேர்த்தால் அவளை மாதிரியே மாறிடுவான் என பரணிக்கு சப்போர்ட்டாக பேசி ஜூலியை அசிங்கப்படுத்தினார்கள் இருவரும் சேர்ந்து.
