திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு இனி தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் . இந்த உத்தரவு சினிமா ரசிகர்கள் மற்றும் படைப்பாளிகள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது .

இந்திய திரை பிரபலங்கள் பலரும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் . புகழ் பெற்ற எழுத்தாளர் சேதன் பகத் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். 

அதில் “தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடலாமே, நாடகம் தொடங்குவதற்கு முன்பு பாடலாமே, செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு முன்பு தேசிய கீதம் பாடலாமே, கேலிக்குரியது இது”, என்று டுவீட் செய்திருந்தார். 

இதனை ஆமோதித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரிடுவீட் செய்திருந்தார். ஆனால் சிறிது நேரத்திற்கு பின்பு தன் பக்கத்தில் இருந்து அதனை நீக்கிவிட்டார்.