தெலுங்கு திரையுலகில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற காதல் திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தை, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.  

இந்தியில் கபீர் சிங் என்கிற பெயரில் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.  நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த வேடத்தில் நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜூன் 21ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தின், புரமோஷன் பணிகள் படு வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  அந்த வகையில் நேற்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள. 'மேரா சோனியா' என்கிற காதல் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  இந்த பாடலுக்கு இரண்டு நிமிடம் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து,  தமிழில், அர்ஜுன் ரெட்டி ரீமேக் 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல் வீடியோ: