கோலிவுட் திரையுலகில் மிகச் சிறந்த படங்களைத் தயாரிக்கும் பட நிறுவனங்களில் ஒன்று நடிகர் தனுஷின் 'வன்டெர்பார் நிறுவனம்'. இந்நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன, ’காக்கா முட்டை’ உள்ளிட்ட படங்கள் தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் அண்மையில்  தெலுங்கில் வெளியாகி  சூப்பர்ஹிட் ஆன ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தின் ரீமேக் உரிமையை தனுஷ் வாங்கியிருப்பதாகவும், இந்தப் படத்தை அவரே தயாரித்து அதில் நடிப்பார் என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் பரவின.

தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வன்டெர்பார் பிலிம்ஸ், இதுவரை ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் உரிமையை எங்களின் நிறுவனம் வாங்கவில்லை என்றும் இதுகுறித்து பரவிய தகவல் முற்றிலும் வதந்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது.