அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் திரையுலகையே ஆச்சரித்துடன் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் ரைசிங் ஸ்டாராக உருவெடுத்துள்ள அவர், தொடர்ச்சியாக 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இவ்விரு படங்களிலும் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் நடித்து அசரடித்திருப்பார் ராஷ்மிகா. 

ரீல் லைஃபில் அசல் காதலர்களாகவே இருவரும் வாழ்ந்ததால், ரியலிலும் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. இதனை மறுத்துள்ள விஜய் தேவரகொண்டா, தானும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும், நாங்கள் காதலிப்பதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் என்றும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். 

தனக்கேற்ற பெண்ணை தேடி வருவதாகவும், கிடைத்ததும் அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், ராஷ்மிகாவுடனான காதல் கிசுகிசுக்கு விஜய் தேவரகொண்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.