பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றாலும், பொருளாதார ரீதியில் அவஸ்தை படும் மக்களுக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் மெல்ல மெல்ல பல தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. இது போன்ற  தளர்வுகளால் கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றாலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகத்தை கடந்து, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. சாதாரண மக்களை தாண்டி, பல பிரபலங்களையும் பதம் பார்த்து வருகிறது  கொரோனா. அந்த வகையில், ஏற்கனவே, பாலிவுட் திரையுலகை சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக், மகள் ஆராத்யா, மற்றும் மாமனார் அமிதாப் பச்சன் என ஸ்டார் குடும்பத்தையே ஆட்டி வைத்தது கொரோனா.

இவர்களை தாண்டியும் பல பிரபலங்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்கான உரிய சிகிச்சை எடுத்து மீண்டு வந்தனர். 

இந்நிலையில் அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகன்,அர்ஜுன் கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை அவரே வெளியிட்டுள்ளார். இதில் எந்த வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மருத்துவர்கள் அறிவுரை படி தன்னை தானே தனிமை படுத்திகொண்டு உள்ளதாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.