பாலிவுட் பட தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர், அவரை விட 12 வயது மூத்த நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருவதாக  பாலிவுட் வட்டாரத்தில் பல ஆண்டுகளாவே ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. 

இதனை உறுதி படுத்தும் விதமாக, இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு செல்லும் புகைப்படங்களும் வெளியாகி இருவருக்கும் உள்ள காதல் கிசுகிசுவை உறுதி செய்தது.

நடிகை மலைக்கா அரோரா, இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘தக்க தைய்ய தைய்யா’ பாடலுக்கு நடனமாடியவர். நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர்.  மலைக்காவிற்கு அர்ஹான் என்ற 16 மகன் இருக்கிறார். அர்ஹான் தற்போது அவருடைய தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனியாக வசித்து வந்த மலைக்கா, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். மற்றும் ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார்.  அப்போது அர்ஜுன் கபூருக்கு, இவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. ஆரம்ப காலத்தில் போனி கபூர் இவர்களுடைய காதல் பற்றி அறிந்து வன்மையாக கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. 

இருவரும் தங்களுடைய காதலில் உறுதியாக இருந்ததால் அர்ஜுன் கபூர்(33), மலைக்கா அரோரா (45 ) ஆகியோரின் திருமணம் வருகிற ஏப்ரல் 19ம் தேதி கோலாகலாமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.