நடிகர் அர்ஜுன் 'நிபுணன்' படப்பிடிப்பின் மீது தன்னுடைய முதுகை தொட்டு, அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக ஸ்ருதி ஹரிஹரன் மீடூ மூலம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய புகாரை தெரிவித்துள்ளார்.

நடிகர் அர்ஜுன் 'நிபுணன்' படப்பிடிப்பின் மீது தன்னுடைய முதுகை தொட்டு, அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக ஸ்ருதி ஹரிஹரன் மீடூ மூலம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய புகாரை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நிபுணன். இதில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடித்திருந்தார். இவர் கன்னடத்தில் பிரபலமான நடிகை என்றாலும் தமிழில் அறிமுகப்படம் இதுதான்.

இவர் முதலில் சிறு அளவிலான பாலியல் குற்றச்சாட்டை வெளிப்பதிய இவருக்கு, நடிகர் அர்ஜுன் பதிலடி கொடுக்கும் விதத்தில், நடிகை ஸ்ருதி கூறுவது முற்றிலும் பொய் என்றும், அப்பட்டமாக தன் மீது இவர் குற்றம் சாட்டியுள்ளதால், ஸ்ருதி மீதி மான நஷ்டஈடு வழக்கு தொடர்வேன் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நடிகை ஸ்ருதி பல தகவல்களை வெளியிட்டுள்ளார்... அதில், “மீ டூ இயக்கம் மிகச் சரியான சமயத்தில் வந்துள்ளது. இது பாலியல் வக்கிரம் படைத்த நமது சமூகத்திடமிருந்து பெண்களை மீட்க உதவும். அதற்கு இந்த மீ டூ ஒரு நல்ல முயற்சியாகும். எனது அமைதியைக் கலைக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.

மேலும் பலமுறை நான் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகியுள்ளேன். வளரும் கலைஞர்களுக்கு வரும் அதே பிரச்சினைதான் எனக்கும் வந்தது. தேவையில்லாத ஆபாசப் பேச்சுகள், வக்கிர செய்கைகள், சைகைகள் என நான் பல அத்துமீறல்களைச் சந்தித்துள்ளேன். இதனால் நான் பலமுறை அசௌகரியமாக உணர்ந்துள்ளேன்.

ஆனால், அவரிடம் என்னால் எனது கோபத்தைக் காட்ட முடியவில்லை. இதற்காக உள்ளுக்குள் நான் வெந்து போனேன். அவரது செயல்கள் அனைத்துமே அவரது மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன.

மேலும், தன்னிடம் மிகவும் நெருங்கி வந்து இரட்டை அதன் பேசி, விருந்துக்கு செல்லலாமா என கேட்டார். தன்னை அவருடைய அறைக்கு அழைத்து, செக்ஸ் டார்ச்சர் செய்தார் என குற்றங்களை அடுக்கினார். அதே போல் அர்ஜுன் பெயரை பாலியல் தொந்தரவுகள் குறித்து மேலும் நான்கு நடிகைகள் தன்னிடம் பேசியதாகவும் நேரம் வரும் போது அவர்களுடைய பெயரை வெளியிடுவேன் என குண்டை தூக்கி போட்டார்.

இந்த புகார்களை தொடர்ந்து மறுத்து வந்த நடிகர் அர்ஜுன், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மானநஷ்டஈடு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தன்மீது அவதூறு புகார்களை பரப்பியதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ஐந்து கோடி பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.