திரைத்துறையில் பெண் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து “மீ டூ” எனும் ஹேஷ் டேக் மூலம் , சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்திருக்கும் புகார் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நடிகர் அர்ஜூன் மீதும் இதே மாதிரியான புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார் கன்னட நடிகை ஒருவர்.

கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜூனுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது , ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவர் முன்னிலையிலும் வைத்தே அர்ஜூன் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக “மீ டூ” டேகில் கூறி இருந்தார். இதற்கு பதிலளித்த அர்ஜூனும் அப்படி ஒரு காட்சி இருந்தது, கடைசியில் அது வேண்டாம் என்று நானே இயக்குனரிடம் சொல்லிவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் ,ஸ்ருதி ஹரிஹரனின் இந்த் புகாரினை மறுத்து பேசி இருக்கிறார். காதல் காட்சிகள் படமாக்கப்படும் போது என்ன நடக்கும் என்பது எனக்கும் தெரியும். அத்தனை பேர் முன்னிலையில் வைத்து என் அப்பா எப்படி அத்துமீறி நடந்திருக்க முடியும்? அப்படியே நடந்தாலும் அதை உடனடியாக அங்கிருந்தவர்களிடம் சொல்லி இருக்கலாமே?
மேலும் என் அப்பா ஸ்ருதியை டேட்டிங் அழைத்ததாக அவர் கூறி இருப்பது கொஞ்சம் கூட நம்ப முடியாதது. அவருக்கு அதற்கெல்லாம் நேரமே கிடையாது. மேலும் என் அப்பா பப், சொகுசு விடுதி போன்றவை மீது நாட்டமில்லாதவர். அவர் மீதான இந்த புகார் தவறானது என தெரிவித்திருக்கிறார்.