பிகில் எத்தனை சாதனைகள் செய்வித்திருந்தாலும் , இந்த படத்தை நினைக்கும் போதெல்லாம் இந்த வன்முறை நிகழ்ச்சி ஞாபகத்தில் இருந்துக் கொண்டே இருக்கும். 

ஒரு சினிமா காட்சிக்காக பொதுச் சொத்தை அழிக்கும் இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிகளா ? அய்யோ என பிகில் படம் கலவரம் பற்றி நடிகை கஸ்தூரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலில் சிறப்பு காட்சி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும், நேற்று ஒரு நாள் மற்றும் அரசால் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள திரையரங்கில் பிகில் சிறப்புக் காட்சி நள்ளிரவு வெளியாகவில்லை எனக்கூறி விஜய் ரசிகர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

அந்த கலவரத்தால் ரவுண்டானா சிக்னலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள், போலீசாரின் ஒலிபெருக்கிகள், நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டன. அது மட்டுமின்றி அங்கு இருந்த பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து, தீ வைத்து எரிக்கப்பட்டன.

Scroll to load tweet…

 இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, 'பிகில் எத்தனை சாதனைகள் செய்வித்திருந்தாலும் , இந்த படத்தை நினைக்கும் போதெல்லாம் இந்த வன்முறை நிகழ்ச்சி ஞாபகத்தில் இருந்துக் கொண்டே இருக்கும். இந்த சம்பவம் யாருடைய வேலை என்பது தெரியவில்லை. உண்மையான விஜய் ரசிகர்கள் இந்த செயலை செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம். விஜயின் ரசிகனோ எதிரியோ என்னவோ. எல்லோரும் இளைஞர்கள். ஒரு சினிமா காட்சிக்காக பொதுச்சொத்தை அழிக்கும் இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிகளா ? அய்யோ’’என்று குறிப்பிட்டுள்ளார்.