பிக்பாஸ் சீசன் 4 விறுவிறுப்புகளுக்கும், பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் சற்றும் யாரும் எதிர்பாராத போட்டியாளர் சுரேஷ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி அவருடைய ஆர்மியை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

இதை தொடர்ந்து, நேற்றைய தினம் போட்டியாளர்கள் அனைவரும் இந்த தீபாவளிக்கு யாரை மிகவும் மிஸ் செய்கிறார்களோ அவர்களுக்கு கண்ணீருடன் கூடிய கடிதத்தை எழுதினர் என்பதை பார்த்தோம். அதே போல் இந்த முறை, அதிக பட்ச போட்டியாளர்கள் பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், மிகவும் சென்டிமெண்டான டாஸ்கை பிக்பாஸ் வைத்துள்ளதை பார்க்க முடிகிறது.

பாட்டி சொல்லே தட்டாதே என்கிற டாஸ்க் குறித்து, ரியோ படித்து காட்டுகிறார். தீபாவளிக்கு தங்களை காண வருவார்கள் என காத்திருக்கும் பாட்டி, சொத்தை பிரித்து கொடுப்பதாக கூறும் போது அணைத்து பிள்ளைகளும் அங்கு வருகிறார்கள்.

இந்த டாஸ்குக்காக அழகு தொகுப்பாளர் அர்ச்சனாவை, பாட்டியாக மாற்றியுள்ளார் பிக்பாஸ். மேலும் அந்த பாட்டி தன்னை யார் நன்றாக பார்த்து கொள்கிறார்களோ அவர்களுக்கு தான், சொத்தை தருவேன் என கூற அனைவரும் போட்டி போட்டு தங்களுடைய அன்பை கொட்டும் நிலையில், ஒருவர் அந்த சொத்தை திருட முயற்சிக்கிறார். இதுகுறித்து தான் தற்போதைய புரோமோ வெளியாகியுள்ளது.