இன்றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை விட குறைவான வாக்குகளை பெற்ற அர்ச்சனா தான் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் புரோமோவில் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ள நபர் யார் என்பதை தெரிவிக்கும் விதமாக வெளியாகி இருந்தது புரோமோ. ஆனால் இரண்டாவது புரோமோ கலகலப்பாக வெளியாகியுள்ளது. 

கோழி பண்ணை டாஸ்கில் அர்ச்சனா தனது முட்டையை பாதுகாத்த விதம், நிஜமாக கோழியாகவே மாறி என அவரை புகழ்கிறார் கமல். பின்னர் கடைசியில் வெடித்த கோபம் குறித்தும் கேட்கிறார்.

அதற்க்கு அர்ச்சனா சோம் அப்படி செய்ததால் தான் கோபப்பட்டேன் என தெரிவிக்கிறார். பின்னர் அது நீங்கள் இல்லையே முட்டை தானே என கேட்க, முட்டையில் தன்னுடைய புகைப்படம் இருந்ததாக காமெடியாகவே பதில் கொடுக்கிறார் அர்ச்சனா.

இதற்கு கமல், இதற்கு முன் போட்டோவை எரித்து, கிழிச்சி எல்லாம் பண்ணி இருக்கோம், அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது வருவது ஏன் என்று கேட்கிறார். எனக்கு முன்னாடியே என் புகைப்படத்தை போட்டு உடைத்தார் என கூற, பின்னாடி போட்டு நீங்கள் உடைத்திருக்க கூடாது என கமல் சோமிடம் கேட்க இந்த புரோமோ காமெடியாக வெளிவந்துள்ளது.