பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதாவிற்கு தனது வீட்டில் இப்படியொரு சோகம் காத்திருக்கிறது என துளியும் நினைத்திருக்க மாட்டார். அனிதா சம்பத்தின் தந்தையும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் நேற்று மரணமடைந்தார் (62) என்ற செய்தியைக் கேட்டு ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர். 

 தனது மகனுடன் சீரடி சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மரணமடைந்தார். அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்பட்டது. இந்த திடீர் மரணம் அனிதா சம்பத்தின் குடும்பத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று அவருடைய உடலுக்குச் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டது. 

அனிதா சம்பத்தின் வீட்டிற்கு சக பிக்பாஸ் போட்டியாளர்களான அர்ச்சனா கணவருடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். அறந்தாங்கி நிஷா, ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் நேரில் சென்று அனிதாவிற்கு ஆறுதல் கூறினர். சக பிக்பாஸ் போட்டியாளரான அனிதாவிற்கு ஏற்பட்ட சோகத்தில் பிக்பாஸ் சொந்தங்கள் அனைத்தும் தோள் கொடுத்து, ஆறுதலாக நின்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...