aravinth samy acting in manirathnam flim at 6th time
கோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் அனைவருக்குமே இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்து விட வேண்டும் என்பது ஆசை...
ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு ஒரு சிலருக்குக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகம் கொடுத்தவர் நடிகர் அரவிந்த்சாமி.
இந்த படத்தை தொடர்ந்து, ரோஜா, பம்பாய், அலைபாயுதே, கடல், ஆகிய 5 படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது கார்த்தி நடித்துவரும் 'காற்று வெளியிடை' படம் ரிலீசுக்கு தயாராக உள்ளதால், அடுத்ததாக ராம் சரணனை வைத்து மணிரத்னம் இயக்க தயாராக இருக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
