அரவிந்த் சாமிக்கு ஜோடியான சூர்யா மனைவி.....

மணிரத்தினம் இயக்கி வெளிவரவுள்ள படம் செக்க சிவந்த வானம். படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்

இந்த படத்தின் படப் பிடிப்பு  கடந்த மாதம் தொடங்கியது. மிகவும் விறுவிறுப்பாக  நடந்து வந்த படப் பிடிப்பு, தற்போது வேலை நிறுத்தம் காரணமாக  நிறுத்தப்பட்டு  உள்ளது.

இந்த  வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் மீண்டும்  படப்பிடிப்பு  விறுவிறுப்பாக  தொடங்க உள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு,ஜோதிகா,அரவிந்த் சாமி உள்ளிட்ட  பல  நட்சத்திரங்கள்  நடிக்கின்றனர்.

குறிப்பிட்ட சில முக்கிய கதாபாதிரத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா,இந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார்

ஜோதிகாவை பொறுத்தவரை திருமணத்திற்கு  முன்பு ஒரு கலக்கல் கலக்கி வந்தவர்...

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் இடைவெளி விட்டாலும்,மீண்டும்  நல்ல நல்ல கதைகளை மையமாக  வைத்து  நடித்து வருகிறார் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.