சீனாவில் உருவான, கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இந்தியா உட்பட 30 நாடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்களை தனிமை படுத்தி மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள்.

குறிப்பாக இந்தியாவில் தற்போது வரை 72 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்ப்டுட்டுள்ளார். மேலும் பரவுவதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள், விமான நிலையம், டோல் கேட், மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

கைபேசி, வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிலும் விழுப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலர் தங்களுடைய ரசிகர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி, தன்னுடைய ரசிகர்களுக்காக ட்விட் ஒன்றை போட்டுள்ளார். அதில்...வணக்கம் மக்களே, நாம் அனைவரும் ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்வதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். தயவுசெய்து உடல்நலம் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களும் இதைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும். நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அது நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

ரசிகர்கள் மற்றும் மக்கள் மீது உள்ள பொறுப்புணர்ச்சியில் அரவிந்த் சாமி போட்ட இந்த ட்விட்டருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.