ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட மொழிகளில், வரும் ஜூலை 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் இந்த படம் உருவாகி உள்ளது.

அதே போல் இந்த படத்திற்கு உலக அளவில் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. தமிழில் இந்த படத்திற்கு சிம்பா என்கிற சிங்கத்திற்கு, நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு பிரபலமும் இணைந்துள்ளார். இந்த படத்தின் மற்றொரு கேரக்டரான ஸ்கார் என்கிற சிங்கத்திற்கு நடிகர் அரவிந்தசாமி டப்பிங் குரல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அரவிந்தசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இவர் ஏற்கனவே 1995ஆம் ஆண்டு வெளியான 'தி லயன் கிங்' படத்தில்  'சிம்பா' சிங்கத்திற்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.