'தனி ஒருவன்' படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தவர் நடிகர் அரவிந்தசாமி. மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைத்து போகன் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் உலகெங்கும் நாளை வெளிவர இருக்கிறது.

மேலும் கதாநாயகனாக இவர் நடிக்கும் 'சதுரங்க வேட்டை' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அரவிந்தசாமி நடிக்கவுள்ள மற்றொரு படத்தின் தகவல் தற்போது இப்போது வெளிவந்துள்ளது.

ஏற்கனவே அரவிந்தசாமி நடித்த 'புதையல்' உள்பட ஒருசில படங்களை இயக்கிய செல்வா, தற்போது 'வணங்காமுடி' என்ற படத்தை இயக்கவுள்ளார். 

இந்த படத்தின் நாயகனாக அரவிந்தசாமியும், அவருக்கு ஜோடியாக ரித்திகாசிங்கும் நடிக்கிறார், இந்நிலையில் இந்த படத்தில் தற்போது நந்திதா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் 'தனி ஒருவன்' படத்தில் அரவிந்தசாமிக்கு தந்தையாக நடித்த தம்பிராமையாவும் இந்த படத்திலும் நடிக்கிறார் மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.