காதல்

கடந்த ஆண்டு மக்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ்தான்.அதில் போட்டியாளராக அறிமுகவானவர்தான் ஆரவ்.இதில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை ஓவியாவுக்கு ஆரவும் நெருங்கி பழகினர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் இருப்பதாக கூறப்பட்டது.

தற்கொலை

ஆனால் சில காரணங்களால் ஓவியாவிடமிருந்து ஆரவ் விலகினார்.இதனால் மனமுடைந்து ஓவியா தற்கொலை வரை சென்று அதன் பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.பரபரப்பாக பேசப்பட்ட இந்த விஷயம் தற்போது மக்களால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது.

நடிப்பு

இந்நிலையில் தனக்கு ஏன் ஓவியாவை பிடிக்கும் என்பதற்கான காரணத்தை ஆரவ் மனம் திறந்து பேசியுள்ளார்.நாம் நாமாக இருப்பது இந்த உலகத்தில் மிக கஷ்டமான விஷயம்.ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான இடங்களில் நாம் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆர்மி

ஆனால் அப்படி இல்லாமல் ஓவியா எல்லா இடத்திலும் அவராகவே இருக்கிறார்.அதனால் தான் அவரை மக்களுக்கு பிடித்திருக்கிறது.ஆர்மி அளவுக்கு ரசிகர்கள் கிடைக்கும் அளவுக்கு புகழ் பெற்றதற்கும் இதுதான் காரணம் என்று கூறியுள்ளார் ஆரவ்.