ஓவியா இரவு நேரத்தில் மழையில் சென்று தூங்கியது பற்றி அனைவரும் அவர் மீது கோபத்தை காட்டி வந்தனர். மேலும் காயத்ரி நீ ஏன் அவளை அழைக்க சென்றாய் என ஆரவை திட்டினார்கள்.

இதற்கு பதிலளித்த ஆரவ், அவள் அங்கு போய் தூங்குவதை பார்த்தல் மிகவும் பாவமாக இருந்தது. அவள் மீது இரக்கப்பட்டு தான் போய் அழைத்தேன் என கூறுகிறார். 

தொடர்ந்து நான் அவள் மீது இரக்கப்பட்டு, அவளுக்கு அறிவுரை கூறுவதால் தான் அவள் தன்னை காதலிப்பதாக கூறுவதாகவும் கூறி புலம்பும் போது... திடீர் என உண்மையில் ஓவியா மிகவும் நல்லவள். யாரிடமும் எதற்காகவும் பொய் சொல்ல மாட்டார். ஒரு நிலையில் நாமாவது போய் சொல்ல நேரிடலாம் ஆனால் அவள் அப்போது கூட பொய் சொல்ல மாட்டாள் என ஜூலி முன்பே கூறியது ஜூலியை அசிங்கப்படுத்துவது போல் இருந்தது.

மேலும் நான் பலமுறை அவளிடம் நாம் நண்பர்கள் தான் என கூறியபோது சரி என்று சொல்லும் ஓவியா... திரும்பவும் காலையில் வந்து தன்னை காதலிப்பதாக கூறுவார் என சொல்கிறார். ஆனால் ஓவியாவை காதலிப்பது போல் ஆரவ் நடந்து கொண்டார் என்பதை மட்டும் சொல்லவில்லை