arav meet director manirathnam
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய ஆரவ். ஓவியாவின் காதல் கிசு கிசு, மருத்துவ முத்தம் போன்ற ஒரு சில சர்ச்சைகளில் சிக்கினாலும் வெற்றிகரமாக பிக் பாஸ் டைடில் வென்றார்.

இவர் ஏற்கெனவே சைத்தான் படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்துள்ளார் ஆரவ்.

ஏற்கெனவே ஒரு மோதலாக இருந்த மாதவனை தன்னுடைய அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய மணிரத்னம். ஆரவையும் வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
