arav break up oviya love start raiza
பிக் பாஸ்ஸில் காதல் ஜோடிகளாக சிறகடித்து பறந்துக்கொண்டிருந்தவர்கள் நடிகை ஓவியா மற்றும் ஆரவ். சில நாட்களாக ஆராவை காதலித்து வருவதாக கூறி வந்த ஓவியா, பின் அவர் உண்மையாக தன்னிடம் நடந்துக்கொள்ள வில்லை என கூறி நாம் இனி நண்பர்களாகவே இருக்கலாம் என சமரசமாக பிரிந்தனர்.

இவர்களது காதல் பிரிந்து இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில், யாரவது லவ் பண்ண கிடைத்தால் நல்ல இருக்கும் என புலம்பி வந்த ரைசாவின் காதல் வலையில் விழுந்துள்ளார் ஆரவ்.

இதனால் ஓவியா மிகவும் சோகமாக காணப்படுவது போல் இன்றய பிரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஓவியா காதலிப்பதாக கூறி பின் இருவரும் ஒன்றாக பிக் பாஸ் வீட்டில் சுற்றி திரிந்த நிலையில். தற்போது ஆரவ் ரைசாவை காதலிப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த காதல் இவரோடு முடியுமா அல்லது நமிதா... ஜூலி... என தொடருமா என பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் 85 நாட்கள் மீதம் உள்ளது அதனால் எது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் இல்லையா...
