arav asking question for oviya
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் 100 நாட்களை எட்டி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை மாடல் ஆரவ் வென்றார்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப் படுத்தும் வகையில். பிக் பாஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில் விஜய் டிவி தொலைக்காட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரால் ரசிக்கப்பட்ட ஜோடி நடிகை ஓவியா மற்றும் ஆரவ். இவர்கள் இருவரும் உண்மையில் இணைந்தால் நன்றாக இருக்கும் என பல ரசிகர்கள் தங்களுடைய கருத்தையும் வலைத்தளம் மூலம் தெரிவித்தது அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் ஒரு சில காரணங்களால் ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்க பின் ஓவியா தற்கொலை வரை சென்று, இந்த நிகச்சியை விட்டு வெளியேறினார். தற்போது இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் ஆரவ் தன்னுடைய மனதில் உள்ள கேள்விகளை ஓவியாவிடம் கேட்டுள்ளார்.
இந்த ப்ரோமோவில் ஆரவ் ஓவியாவிடம் 'இப்போ லைஃப் எப்படி போகிறது?” என கேட்க, அதற்கு ஓவியா சூப்பரா போகுது என பதில் அளித்தார்'. இதற்கு தொகுப்பாளர் மாகாபா என்ன ஒரு ஏக்கமான கேள்வி என ஆரவை கலாய்த்துள்ளது வெளியாகியுள்ளது.
