ஆண்களுடன் ஒப்பிடும் போது,  பெண்கள் எந்த அளவிலும் குறைந்தவர்கள் இல்லை என,  ஒவ்வொரு துறையிலும் கால்பதித்து சாதித்து வருகின்றனர் தற்போதைய பெண்கள்.  அந்த வகையில், ஆண்களுக்கு நிகராக தற்போது காமெடி நிகழ்ச்சிகளிலும் பல பெண்கள் கலக்கி வருகின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் சின்னத்திரை காமெடி நடிகை அறந்தாங்கி நிஷா.  இவர் தன்னுடைய கலகலப்பான காமெடிய பேச்சால்,  ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.

ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.  இவர் செய்து வரும் அணைத்து காமெடி நிகழ்ச்சிகளுக்கும் இவரின் குடும்பம் தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறது. 

இந்நிலையில் அறந்தாங்கி நிஷா 7 மாத கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. ஆனால் நிஷா சற்றும் ஓய்வின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.  சமீபத்தில் கூட துபாயில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். எனவே இவர் செய்யும் இந்த செயலை பார்த்து இவரை பல்வேறு இடங்களில் பார்க்கும் ரசிகர்கள் 7 மாதத்தில் இப்படி ஓய்வில்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா என அன்புடன் கண்டிக்கிறார்களாம்.  

மேலும் இதுபோன்ற நேரத்தில், டிராவல் செய்யக்கூடாது என தன்னை பார்ப்பவர்கள் எல்லாம் அட்வைஸ் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் நிஷா. அனைவரின் அன்பும் அக்கறையும் தனக்கு புரிந்தாலும், மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்தை பிடித்து இருப்பதாகவும்.  நிஷா குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற காரணத்திற்காக ஒரு வருடம் இரண்டு வருடம் ஓய்வு எடுத்துவிட்டால் பின் இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்கிற காரணத்திற்காக  தானும் என்னுடன் சேர்ந்து என் குழந்தையும் தற்போது காமெடி நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பதாக கூறி அசர வைக்கிறார் நிஷா.

மேலும் என்னுடைய கணவர் சம்மதத்துடன்தான் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகும்,  குழந்தை பிறப்பதற்கு முதல் நாள் கூட தான் மேடையில் நடிக்க விரும்புவதாகவும் கூறி ஆச்சரிய படுத்துகிறார்.