aram movie release date changed

கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'அறம்'. இந்த படத்தில் நயன்தாரா இது வரை நடித்திராத மாவட்ட ஆட்சியர் வேடத்தில் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை இயக்குனர் 'மீஞ்சூர் கோபி' இயக்கியுள்ளார். மக்களின் முக்கிய பிரச்சனையான தண்ணீர் பிரச்சனை மற்றும் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விளக்கும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை படக்குழுவினர் நவம்பர் மாதம் 3 தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவின் காரணமாக ஆகஸ்ட் மாதம் 6 தேதி ரிலீஸ் ஆக இருந்த திரைப்படங்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டது.

தற்போது அப்படி நிறுத்தி வைக்கப்பட்ட படங்கள் நவம்பர் 3 தேதி ரிலீஸ் செய்யப்படும் என்றும் இதற்கு அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டது.

இதன் காரணமாக அறம் படக்குழுவினர் நவம்பர் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த இந்த படத்தை நவம்பர் 10 தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.