aram movie latest update
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள 'அறம்' திரைப்படம் வெளியானது. முதல் நாளில் படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது அனைத்து திரையரங்கத்திலும் 'அறம்' படத்தை பார்க்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று நடிகை நயன்தாரா முதல் முறையாக காசி, ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகளுக்கு நேரடியாகச் சென்று தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அவர்களுடைய கருத்தைக் கேட்டறிந்தார். மேலும் படத்தைப் பார்த்த அனைவரும் சமூக அக்கறை கொண்ட திரைப்படம் என பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கக் கூறி நயன்தாரா இயக்குனர் கோபி நயினாரிடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நயன்தாராவின் இந்த அதிரடி முடிவை அறிந்த ரசிகர்கள் ஒரு சிலர் இந்த முடிவை ஏற்றுக்கொண்டாலும். ஒரு சிலர் இந்தத் திரைப்படம் நயன்தாரா வாழ்வில் ஒரு 'மாஸ்டர் பீஸ்' எனவே இதற்கு இரண்டாம் பாகம் தேவை இல்லை என்பது போன்ற கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
