அறம் பட இயக்குனரின் அகரம் காலனி பட ஷூட்டிங்கில் விபத்து... மின்சாரம் தாக்கி லைட் மேன் பலி

அகரம் காலனி படத்தின் படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்ட லைட்மேன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Aram director gopi nainar next movie akaram colony shooting spot accident light man dead gan

நயன்தாரா நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் அறம். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோபி நாயினார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை அப்படியே திரையில் காட்டியதால் பாராட்டுக்களை பெற்ற இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அகரம் காலனி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் கோபி நாயினார்.

அகரம் காலனி படத்தின் படப்பிடிப்பு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் நடைபெற்று வந்தது. அங்கு சோத்துபெரும்பேடு என்கிற கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில், அகரம் காலனி பட ஷூட்டிங்கின் போது எதிர்பாராமல் நேர்ந்த விபத்தில் சிக்கி லைட் மேன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அகரம் காலனி படத்தில் லைட் மேன் ஆக பணியாற்றி வந்த சண்முகம் படப்பிடிப்பு தளத்தில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு கிடந்தாராம். இதைப்பார்த்து பதறியடித்து ஓடி வந்த படக்குழு பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த சண்முகத்தை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்தனர். இதையடுத்து சண்முகத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து படக்குழுவினருடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 2023-ல் யூடியூப்பில் ரசிகர்களால் ரிப்பீட் மோடில் கேட்கப்பட்டு அதிக Views-களை பெற்ற டாப் 5 தமிழ் சாங்ஸ் லிஸ்ட்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios