Asianet News TamilAsianet News Tamil

'அறம் 2 ' படத்தில் நயன்தாராவுக்கு பதிலா இந்த ஹீரோயினா? கசிந்தது தகவல்!

நடிகை நயன்தாரா கலெக்டராக நடித்து,  கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அறம்.  இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி, படத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்தது.
 

aram 2 movie heroine is samantha?
Author
Chennai, First Published Jul 7, 2019, 12:35 PM IST

நடிகை நயன்தாரா கலெக்டராக நடித்து,  கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அறம்.  இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி, படத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்தது.

aram 2 movie heroine is samantha?

உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ஆழ்துளை கிணற்றில் மாட்டிக்கொண்ட குழந்தையை மீட்க நயன்தாரா எடுக்கும் அதிரடி முடிவுகளும்,  உயிரின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியிருந்தார் இயக்குனர் கோபி நயினார்.  இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'அறம் ' படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

aram 2 movie heroine is samantha?

இதில் நயன்தாராவையே நடிக்க வைக்க ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், நடிகை சமந்தாவின் பெயரும் அடிபட்டு வருகிறது.  நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'தர்பார்' விஜயுடன் 'பிகில்', சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்ம ரெட்டி' மற்றும் ஒரு சில படங்களில் பிசியாக இருப்பதால், கோபி நயினார் சமந்தாவை நடிக்க வைக்கும், முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கோபி நாயனாரின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தும் நடிகை சமந்தாவிடம் பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios