ஆஸ்கர் நாயகனுக்கு விழா.. மேடையிலேயே சூசகமாக மட்டம் தட்டிய இளையராஜா? - பதிலுக்கு அன்பால் அடித்த ARR!
AR Rahman : Slumdog Millionaire என்ற படத்தில் இடம்பெற்ற "ஜெய் ஹோ" என்ற பாடலுக்காக கடந்த 2009ம் ஆண்டு தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றார் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்.
முதல் முறையாக ஒரு தமிழ் கலைஞன் ஆஸ்கர் விருது வென்று திரும்பியதை பிரம்மாண்டமாக கொண்டாட கடந்த 2009ம் ஆண்டு ஒரு இசை விழா கொண்டாடப்பட்டது. அதில் விழாவின் நாயகனாக ஏ.ஆர் ரகுமான் பங்கேற்க, அவரை பெருமைப்படுத்த அந்த அரங்கில் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா, இசை மேதை எம்.எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலரும் நேரில் கலந்து கொண்டு ரகுமானை வாழ்த்தி பல விஷயங்களை பேசினார்.
விழா மேடையில் பலரும் வீற்றிருந்த நேரத்தில் பேச தொடங்கிய இளையராஜா, துவக்கத்திலிருந்தே ஏ.ஆர் ரகுமானை சற்று குறைத்து மதிப்பிட்டு பேசியதாக அப்பொழுது பரவலாக பேசப்பட்டது. பிற மொழி இசையமைப்பாளர்கள் பற்றியும், மேடையில் வீற்றிருந்த மூத்த இசைக்கலைஞர் எம் எஸ் விஸ்வநாதன், பால முரளி கிருஷ்ணா உள்ளிட்டோரை குறிப்பிட்டு பேசிய இளையராஜா, இவர்கள் யாருக்கும் கிடைக்காத ஆஸ்கர் விருது ரஹ்மானுக்கு கிடைத்திருப்பதாக பேசினார்.
பிரபுதேவா போட்ட 3 கண்டிஷன்... ஏற்க மறுத்து காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! பிரேக் அப் ஸ்டோரி
தொடர்ந்து பிற மொழி கலைஞர்களை உயர்த்தி பேசி வந்த இளையராஜா, வெகு சில நிமிடங்கள் தான் ரகுமான் பற்றி பேசினார். ஆனால் அப்பொழுதும் கூட இக்கால இசைக்கு மதிப்பு அதிகமாக கிடைத்து வருகிறது என்று பொருள்படும் வண்ணம் பேசினார். அங்கு குழுமியிருந்த சிலருக்கு இது வருத்தத்தை அளித்தது என்றே கூறலாம்.
இன்றளவும் அந்த நிகழ்ச்சியை காணொளியாக பார்க்கும் பலருக்கும், இளையராஜாவின் பேச்சு சற்று உறுத்தலை தருகிறது என்பதே உண்மை. இறுதியாக இளையராஜா பேசி அமர்ந்த பிறகு ஏ.ஆர் ரகுமான் பேச தொடங்கினார். அப்போது எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லி தனது உரையை ஆரம்பித்த ஏ ஆர் ரகுமான் என் தாய் தந்தை எனக்காக பட்ட கஷ்டங்களை தான் இப்போது நான் அறுவடை செய்யும் வெற்றிகள் என்று கூறினார்.
அரங்கமே அதிர ஆரம்பித்த அந்த நேரத்தில் எல்லோருக்கும் ஆஸ்கர் கிடைத்து விடுவதில்லை, காரணம் அதற்கு முறையாக யாரும் விண்ணப்பிப்பது இல்லை என்று பேசினார் ரஹம்னா. அப்படி விண்ணப்பித்திருந்தால் எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா போன்ற பெரும் கலைஞர்களுக்கும் அது கிடைத்திருக்கும் என்றார் அவர்.
நாம் இசை அமைக்கின்றோம், ஆனால் அதை ஆஸ்கர் மேடையில் உள்ள நீதிபதிகள் அறிந்துகொள்ளும் வண்ணம் செய்ய வேண்டும். அதை நான் செய்தேன், எனக்கு ஆஸ்கர் கிடைத்தது என்று தன்மையோடு பேசினார். அது மட்டுமல்லாமல் இறுதிவரை எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா மற்றும் பிற மொழி கலைஞர்களை உயர்வாகவே பேசி அமர்ந்தார். ஏ.ஆர் ரகுமான்.
நடிகர் மோகன்லாலுக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி