போதையில் பேசிய கிட்டாரிஸ்ட்; ஏ.ஆர்.ரகுமானுக்கு வந்த புத்தி! இசைப்புயல் பகிர்ந்த தகவல்!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இசை குழுவினரோடு சேர்ந்து வாசித்து வந்த போது... கிட்டாரிஸ்ட் சொன்ன வார்த்தை தான், தன்னை இசைப்புயலாக உருவெடுக்கவைத்ததாக கூறப்படுகிறது.
இசை துறைக்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒருவர் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான். இளையராஜா உச்சத்தில் இருந்த சமயத்தில், அதிரடியாக தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டு மொத்த இயக்குனர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையில் எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும், ரோஜா படத்தின் இசையை கேட்கும் போது.. மனதின் உள்ளே புகுந்து அலைபாய தூண்டும். ரோஜா படத்தின் இசைக்காக, ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக, இசை துறையில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் சாதனைகள் சொல்லில் அடங்காதவை. குறிப்பாக இந்திய திரையுலகை சேர்ந்த, பிரபலங்களின் கனவாக இருந்த ஆஸ்கர் கனவை நிறைவேற்றியவர் ஏ.ஆர்.ரகுமான். இந்த விருதை பெற ஆஸ்கர் மேடை ஏறியபோது 'எல்லாம் புகழும் இறைவனுக்கே' என தமிழில் உச்சரித்த வார்த்தை மூலம் அமெரிக்கர்கள் முன் நான் ஒரு தமிழன் என தலை நிமிர்ந்து கூறும் விதத்தில் இருந்தது.
எதிர்பாராத ட்விஸ்ட்; சற்று முன் பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர் இவரா?
ஆஸ்கர் விருதை, ஹாலிவுட் திரைப்படமான 'ஸ்லம் டாக் மில்லியனியர்' என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். மேலும் இந்த படத்தின் இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இந்த இரண்டு விருதுகளையும், பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையும் ஏ.ஆர்.ரகுமானுக்கு உண்டு. 2010-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய 11 வயதிலேயே இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார். இதை தொடர்ந்து, பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300 இக்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார்.
2024- வில்லன் நடிப்பில் மிரட்டிய 5 நடிகர்கள்! யார் யார் தெரியுமா?
சினிமாவில் இசையமைப்பதற்கு முன்பு ஏராளமான இசை குழுவில் ஏ.ஆர்.ரகுமான் வாசித்துள்ளார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை தான் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இசை குழு நிகழ்ச்சிகளில், எப்போதும் ஏற்கனவே திரைப்படங்களில் வெளியாகி ஹிட்டான படங்களுக்கு மட்டுமே இசையமைக்கப்படும். இதையே தான் ஏ.ஆர்.ரகுமானும் செய்து கொண்டிருந்தாராம். அப்போது போதையில் இருந்த கிட்டாரிஸ்ட் ஒருவர், ஏ.ஆர்.ரகுமானிடம் ஏற்கனவே வந்த பாடலின் இசையை தான் நீ காப்பி அடித்து கொண்டிருக்கிறாய் என்பதை புரிந்து கொள்.
உனக்கென தனித்துவமான ஒன்றை உருவாக்கு அப்போது தான் நீ கும்பலோடு இல்லாமல் தனித்து தெரிவாய் என கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமானுக்கு அப்போது தான் புத்தி வந்துள்ளது. புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி குழுக்களில் சேர்ந்து வாசிப்பதை நிறுத்திவிட்டு, இசையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த தகவலை, ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அன்று அந்த கிட்டாரிஸ்ட் கூறிய வார்த்தை தான் இசை புயலாக ஏ.ஆர்.ரகுமானை மாற்றியதாம்.