இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் "ஜிங்கிள் பெல்" என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். மனதை மயக்கும் இதமான இசையில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள அந்த பாடலை யு-டியூப்பில் இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் சமயத்தில், ராக் ஸ்டார் அனிருத் தனது அதிரடி ஸ்டைலில் "ஜிங்கிள் பெல்" பாடலை வெளியிட்டுள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள நிலையில், தற்போது "தளபதி 64" படத்திற்கு இசையமைத்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "தளபதி 64" திரைப்படம் 2020ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பிசியாக இருக்கும் அனிருத், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு "ஜிங்கிள் பெல்" பாடலை வெளியிட்டுள்ளார். அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பாடல், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ராக் மியூசிக்கில் அதிரடியாக பட்டையைக் கிளப்பும் அந்த பாடல் லைக்குகளை குவித்து வருகிறது.இருந்தாலும் ஏ.ஆர்.ரகுமானும், அனிருத்தும் ஒரே நேரத்தில் ஜிங்கிள் பெல் பாடலை வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே சந்தேகத்தை கிளப்பியுள்ளது.