தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் விஜயின் ‘சர்கார்’ படத்தை இயக்கியிருக்கும் ஏ. ஆர்.முருகதாஸ்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவிருப்பவர் என்ற பரபரப்பான செய்தி சற்றுமுன்னர் வெளியாகியிருக்கிறது. 

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட முருகதாஸ் ‘ரஜினியை சமீபத்தில் சந்தித்து அவருக்கு எனது அடுத்த படத்தின் முழுக்கதையையும் சொன்னது உண்மைதான். அவர் அக்கதையை மிகவும் ரசித்துக்கேட்டார். நாங்கள் இணைந்து படம் பண்ணுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியிருக்கிறது. மிக விரைவில் அந்த  நல்ல செய்தி விரைவில் வரும்’ என்று தெரிவித்திருக்கிறார். 

ஏ.ஆர்.முருகதாஸின்’சர்கார்’ ரஜினியின் ‘பேட்ட’ இரு படங்களையும் தயாரித்துவரும் சன் பிக்‌ஷர்ஸே இப்படத்தையும் தயாரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் கமல், ரஜினி இருவருமே மாய்ந்து மாய்ந்து புதுப்பட அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.