சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடைசியாக இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், 'பேட்ட' படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் களமிறங்குவார் என பலரும் எதிர்பார்த்தனர். மாறாக தான் சட்டமன்ற தேர்தலில் தான் களமிறங்குவேன், தற்போது போட்டியிட போவதில்லை என அறிவித்தார். இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கதையில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் என தகவல் வெளியானது.

ஏப்ரல் 10 ஆம் தேதி துவங்க உள்ள இந்த பாடத்தின் படப்பிடிப்பிற்கான, போட்டோ ஷூட் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பலகட்ட பாதுகாப்பு மத்தியில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியாகி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படக்குழுவினரை அதிர்ச்சியாக்கியுள்ளது. 

இந்த புகைப்படத்தில், ரஜினிகாந்த் அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதை உறுதி படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஜினி இருக்கிறார்.

இந்த படத்தில், சந்தரமுகி படத்தை தொடர்ந்து நயன்தாரா ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார். 'பேட்ட' படத்திற்கு இசையமைத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.