சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அல்டிமேட் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று, வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'காலா' . இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி இருந்த இந்த படத்தில், ரஜினிக்கு சமமான வேடத்தில், வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நானா பட்நேக்கர். இவருடைய உதவியாளர்களில் ஒருவராக நடித்திருந்த நடிகர் பிரதீப் காப்ரா தற்போது 'தர்பார்' படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் இவரை பார்த்ததும்,  அவரை அழைத்து ஏற்கனவே நாம் இருவரும் இணைந்து நடித்திருக்கிறோம் அல்லவா... என கேட்டு பிரதீப் காப்ராவை அதிர்ச்சியடைய வைத்தாராம்.

காரணம், 'காலா' படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் வந்த என்னை, இப்போதும் அவர் நினைவில் வைத்து கொண்டு அழைத்து பேசியது நம்ப முடியவில்லை என்றும், அவருடன் 'தர்பார்' படத்தில் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகரான இவர் ஏற்கனவே நடிகர் ஆர்யா நடித்த 'சேட்டை', சூர்யாவுடன் 'அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.