Apologize within ten days - BJP MP actor Prakash Raj time...

சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தரக்குறைவாக பதிவிட்ட ராஜ்யசபா பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா பத்து நாள்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கெடு வைத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ், பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலையை சிலர் கொண்டாடுவதைப் பார்த்துக்கொண்டு மோடி ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்? என்று சில வாரங்களுக்கு முன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பிரகாஷ் ராஜை அவமதிக்கும் விதமாக தரக்குறைவான பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இதனையடுத்து, அந்தக் கருத்துக்களை நீக்குமாறு பிரகாஷ்ராஜ் பிரதாப் சிம்ஹாவிடம் கூறினார். அதற்கு சற்றும் அசரவில்லை எம்.பி.பிரதாப் சிம்ஹா.

இந்த நிலையில், தன்னை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக எம்பிக்கு பிரகாஷ் ராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், "பத்து நாட்களுக்குள் அவர் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், தன்னை அவமதித்ததற்காக எம்பி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார்.