நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடும் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்யாவுக்கு யார் ஜோடியாக போகிறார், அவருடன் திருமண கோலத்தில் நிற்கப்போகும் பெண் யார் என ரசிகர்களும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். 

இறுதிகட்டம்:

கடைசி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில், 5 போடியாளர்களை தேர்வு செய்து அவர்களின் வீட்டிற்கே சென்று வந்தார் ஆரியா. மேலும் அந்த போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து அவர்களை பற்றி தெரிந்துக்கொண்டு தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். 

வெளியேறிய ஸ்வேதா:

நேற்றைய தினம் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்று கூறப்பட்டது. மீதம் உள்ள மூன்று போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் பைனலில் உள்ளனர் என்று நடிகையும், தொகுப்பாளருமான சங்கீதா தெரிவித்தார். 

பின் சுசானா மற்றும் அகாத்தா ஆகியோர் பைனலுக்கு செல்வதாக அறிவித்தனர். பின் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட உயரமான பொண்ணு ஸ்வேதா இன்று இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற உள்ளதாகவும் அறிவித்தார். இவரிடம் ஆர்யா உங்களால் மட்டும் தான் தனக்கு மிகச்சிறந்த தோழியாக இருக்க முடியும் என நம்புவதாக கூறி அவரை வீடிற்கு அனுப்பி வைத்தார்.

அடம் பிடிக்கும் அபர்ணதி:

தற்போது மீதம் உள்ள போட்டியாளர்கள் அபர்ணதி மற்றும் சீதா லட்சுமி. இவர்களில் யார் இந்த நிகழ்ச்சியை தொடரப்போகிறார் யார் வெளியேறப் போகிறார் என்கிற குழப்பம் ரசிகர்களுக்கு இருந்த நிலையில்... அபர்ணதி அழுது கதறுவது போல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் அபர்ணதி.... "எனக்கு ஆட தெரியாது, உனக்காக ஆடுன, பாட தெரியாது உனக்காக பாடுன என்ன ஏன் வெளியில போக சொல்ற... உனக்கு என்ன பிடிக்கலையா என்னால போக முடியாது என காதலோடு கதறியுள்ளார். இவருடைய அழுகை பார்பவர்கள் மனதையே உருக்கும் படி அமைந்துள்ளது.