aparnathi commited new movie pair with gv
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்யாமல் இங்கிருந்து போக மாட்டேன்... என்று அடம் பிடித்த போட்டியாளர் தான், கும்பகோணம் பொண்ணு அபர்ணதி.
இவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஆர்யா வெளியேற்றிய போது கூட, பல கேள்விகளை ஆர்யாவிடம் எழுப்பினார். அழுது கதறினார். பின் ஆர்யா இவரை தனியாக அழைத்து சென்று சமாதானம் செய்து அனுப்பினார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
இந்நிலையில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் ஹீரோவாக இருந்த, ஆர்யாவிற்கே பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத போது, இதில் கலந்துக்கொண்ட, அபர்ணதிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
தற்போது அபர்ணதி இயக்குனர் வசந்தபாலன் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடிகை ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
