இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து, பிரம்மாண்ட இயக்குனர்களில்  ஒருவராக அனைவராலும் அறியப்பட்டவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2 ' ஆகிய படங்கள் உலக அளவில் மாஸ் காட்டியது.

தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் தேஜா, நடித்து வரும் படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகிறார். இந்நிலையில் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா திருமணம் இன்று ஜெய்ப்பூரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது.

கார்த்திகேயா திருமணத்தில் கார்த்திகேயா - பூஜா திருமணத்தில் கலந்துகொள்ள பல பிரபலங்கள் ஜெய்ப்பூருக்கு படையெடுத்துள்ளனர்.

அவர்களுக்கு எஸ்எஸ் ராஜமவுலி குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் கார்த்திகேயா பூஜா திருமணத்தில் கலந்துகொள்ள பாகுபலி நாயகி அனுஷ்கா இருவரும் ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளனர்.

அனுஷ்கா ஏர்போர்ட் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், மற்றும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.  'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக தன்னுடைய வெயிட்டை 30 கிலோவிற்கு மேல் கூட்டிய அனுஷ்கா, எடையை குறைக்க முடியாமல் வெளிநாட்டிற்கு சென்று எடை குறைக்கும் சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்பட்டது.

நிலையில் இவருடைய ஸ்லிம் பிட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதிலும் அனுஷ்கா முன்பு போல் இல்லை,  குண்டாக தான் இருக்கிறார் என்பது போல் ரசிகர்கள் கூறி வருகின்றனர். எப்படி இருந்த அனுஷ்கா இப்படி ஆகிட்டாங்களே!