உடல் எடை குறைத்த பின், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை அனுஷ்கா. அந்த வகையில் தற்போது 'லைசென்ஸ்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

அரசியல்வாதியும் நடிகருமான சிரஞ்சீவி நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும்  பிரமாண்ட படமான 'சைரா  நரசிம்ம ரெட்டி' படத்தில் தான் நடிகை அனுஷ்கா  நடிக்க உள்ளார்.

 நடிகர் சிரஞ்சீவி, சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம், 'சைரா நரசிம்மா ரெட்டி' . இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.  மேலும் விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், தமன்னா, சுதீப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இதில் புதிதாக நடிகை அனுஷ்கா ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அனுஷ்கா வருகிறார். இந்த படத்தின் மூலம் ஒரே படத்தில் அனுஷ்கா, நயன்தாரா, தமன்னா ஆகிய மூன்று முன்னணி நடிகைகளும் இணைந்து நடிக்க உள்ளனர். 

மேலும் அனுஷ்கா நடித்து வரும் 'சைலென்ஸ்' படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.