தென்னிந்திய திரையுலகில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, பஞ்சமுகி, அருந்ததி, போன்ற படங்கள் மிகவும் பிரபலம்.

35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவருக்கு, திருமணம் செய்து வைக்க இவரின் பெற்றோர் பல்வேறு வரன்களை பார்த்தும், இதுவரை இவருக்கு திருமணம் நடக்க வில்லை.

இந்நிலையில் கடந்த வாரம், நடிகை அனுஷ்காவிற்கும், இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு வதந்தி வைரலாக பரவியது.

இந்நிலையில் முதல் முறையாக நடிகை அனுஷ்கா, செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பிரகாஷ் கோவலமுடியுடனான திருமணம் குறித்து பேசியுள்ளார். இதில் அவர் கூறியுள்ளதாவது, "என்னுடைய திருமணம் குறித்து வெளியான செய்தியில் துளியும் உண்மை இல்லை. இதுபோன்ற வதந்திகளால் நான் எப்போதும் பாதிக்கப்படுவதில்லை. எனது திருமணம் இவ்வளவு பெரிய விஷயமா என தோன்றுகிறது?

அப்படியே நான் திருமண உறவில் இணைந்தாலும் அதனை யாரிடமும் மறைக்க முடியாது.  இது மிகவும் உணர்வு பூர்வமான விஷயம்.  எனக்கு என சில சுதந்திரம் உள்ளது அதில் யாராவது ஊடுருவ முயற்சித்தால் எனக்குப் பிடிக்காது.

திருமணம் என்பது ஒரு புனிதமான ஒன்று. அது அனைவருக்கும் முக்கியம், எனக்கும் கூட. எனவே திருமணம் குறித்து கண்டிப்பாக அறிவிப்பேன் என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.